தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் என நம்புவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் நேற்று தனது 44ஆவது பிறந்த நாளை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் கொண்டாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “இந்த இல்லம் புனிதமான இடம் என்பதால் பிறந்தநாளன்று இங்கு வந்துள்ளேன். பிறந்தநாளன்று நிறைய நல்லா விஷயங்கள் நடப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் நடிக்க வருவதை வரவேற்கிறேன். அவர் இன்னும் நிறையப் படங்களில் நடிக்க வேண்டும். நடிகர் சங்க வழக்கு நிலுவையில் இருப்பதால் கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களுக்கு உதவ முடியவில்லை.
தேர்தலின்போது திமுக நிறைய வாக்குறுதிகளை அளித்தது. அவைகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன். ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்வார் என்பதால்தான் மக்கள் அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். இ்ப்போது அதைவிடச் சிறப்பாக அவர் செயல்படுவார். முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி அவர்களால் சினிமா துறைக்கு நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.
**-இராமானுஜம்**
�,