பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் தலைமறைவு!

entertainment

மலையாள சினிமாவில் வளரும் நடிகரும், தயாரிப்பாளருமான விஜய்பாபு, படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பல பெண்களை தனது பாலியல் விருப்பத்துக்குப் பயன்படுத்தியதாக
அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து மலையாள இளம் நடிகை ஒருவர் போலீஸில் புகார் அளித்தததைத் தொடர்ந்து அவர் மீது பாலியல் வழக்கு தொடரப்பட்டது. அப்போது விஜய்பாபு வெளிநாட்டில் இருந்ததால் பிரச்சினை முடிந்த பின் தாயகம் செல்லலாம் என வெளிநாட்டிலேயே அவர் இருப்பதாகவும், இல்லை,அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாகவும் கூறப்பட்டது.
துபாயில் அவருக்கு பல்வேறு தொழில்கள் இருப்பதால் அங்கு தப்பிச் சென்று இருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் உடனடியாக விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி கொச்சி போலீஸார் விஜய்பாபுவுக்கு இமெயில் மூலம் நோட்டீஸ் அனுப்பினர்.
இதற்கிடையே முன்ஜாமீன் கோரி விஜய்பாபு கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்னும் ஒருசில தினங்களில் விசாரணைக்கு வருகிறது. அவருக்கு முன்ஜாமீன் கிடைக்க வாய்ப்பிருப்பதால் அதற்குள் அவரை கைது செய்ய போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதனால் விஜய்பாபு துபாயில் இருந்து வேறு நாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாடுகளில் சக்திமிக்க நபராக உள்ள விஜய்பாபு 10 நாட்களுக்கு ஒருமுறை நாடு விட்டு நாடு செல்வதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் மத்திய அரசின் வெளியுறவுத் துறை, கொச்சி போலீஸாரின் வேண்டுகோளை ஏற்று விஜய்பாபுவின் பாஸ்போர்ட்டை முடக்கி உள்ளது.
**அம்பலவாணன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *