விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். தமன் இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்யுடன் நடிக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் கதை என்ன என்பது குறித்து இயக்குநர் வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவல்படி தொடர்ந்து ஆக்க்ஷன் படங்களில் நடித்து வரும் விஜய், அடுத்து குடும்ப சென்டிமெண்ட் படத்தில் நடிக்கவுள்ளார். கதைப்படி விஜய் எல்லோரிடமும் அதீத அன்பு வைத்து விடுவாராம். இதனால் எழுகின்ற சிக்கல்கள் தான் கதை என்கிறார்கள். இதுவரை அதிகம் பேசாமல் நடித்து வந்த விஜய் இந்த படத்தில் கலகல என அரட்டை அடிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். விஜய் நடிக்க தொடங்கிய காலத்தில் கலகலப்பான கேரக்டர்களில் தான் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**அம்பல்வாணன்**
�,