_நடிகர் விஜய்யின் 66வது பட பூஜை இன்று!

Published On:

| By admin

நடிகர் விஜய்யின் 66வது படப்பிடிப்பின் பூஜை இன்று போடப்பட்டது.

நெல்சனுடன் நடிகர் விஜய் இணைந்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் இந்த மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்திற்கான டிக்கெட் புக்கிங் நேற்றே பல திரையரங்குகளில் ஓப்பனாகி விட்டது. இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்திற்காக பத்தாண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் சன் டிவியில் கொடுத்துள்ள பேட்டி இந்த வாரம் ஞாயிறு இரவு ஒளிபரப்பாக இருக்கிறது. இயக்குநர் நெல்சனே நடிகர் விஜய்யை பேட்டி எடுத்துள்ளார்.

‘பீஸ்ட்’ படப்பிடிப்பின் போதே நடிகர் விஜய்யின் 66ஆவது படம் குறித்தான தகவல் வெளியானது. ‘பீஸ்ட்’ படம் ஹெய்ஸ் மற்றும் நெல்சனின் வழக்கமான காமெடி கலந்த கதையாக இருக்கும் என சொல்லப்படும் நிலையில் நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குகிறார். இதனை தில் ராஜூ தயாரிக்கிறார். நடிகர் விஜய்யின் 66வது படமான இது ‘துள்ளாத மனமும் துள்ளும்’ போல குடும்ப கதையாக இருக்கும் எனவும் நடிகர் விஜய்க்கு கதை மிகவும் பிடித்திருக்கிறது எனவும் இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் படத்தின் கதாநாயகி யார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று நடிகை ராஷ்மிகாவின் பிறந்தநாளன்று அவர்தான் படத்தின் கதாநாயகி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் ‘மாஸ்டர்’ படத்திலேயே இசையமைக்க வேண்டியதாக இருந்த வாய்ப்பு இசையமைப்பாளர் தமனுக்கு நழுவியது. அது இப்போது விஜய்யின் 66வது படத்தில் கைக்கூடி இருக்கிறது.

மேலும் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்திருக்கிறது. இதில் நடிகர் விஜய், ராஷ்மிகா, வம்சி, தில் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் படத்தின் ஒரு வார படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் எனவும் பாடல் காட்சியில் இருந்து படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல் வந்துள்ளது. தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் இந்த படம் உருவாகிறது. நடிகர் விஜய் முதன் முறையாக தெலுங்கு படம் ஒன்றில் நேரடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

**ஆதிரா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share