சந்தானம் நடிப்பில் ஜான்சன் இயக்கத்தில் ரிலீஸூக்குத் தயாராகிவிட்ட படம் ‘பாரிஸ் ஜெயராஜ்’. இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சந்தானத்துக்கு கடந்த வருடம் டகால்டி மற்றும் பிஸ்கோத் படங்கள் வெளியானது. ஆனால், இரண்டுமே பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. இந்நிலையில், சந்தானத்துக்கு அடுத்து ரிலீஸாக இருக்கும் பட்ம ‘பாரிஸ் ஜெயராஜ்’. சந்தானம் நடித்து வெளியான A1 படத்தின் இயக்குநரே இப்படத்தையும் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் கானா சிங்கராக சந்தானம் நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்துமே பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தை வருகிற பிப்ரவரி 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்திருக்கிறது.
இந்தப் படத்தில் அனைகா சோட்டி மற்றும் சஸ்டிகா இருவரும் லீட் ரோலில் நடித்திருக்கிறார்கள். கானா பாடகரான சந்தானம் காதல் தோல்வி அடைகிறது. அதன்பிறகு, சந்தானம் செய்யும் அலப்பறையே ஒன்லைன். ஏ1 மாதிரி, இந்தப் படமும் லொல்லுசபா பாணியில் காமெடி அதகளமாக இருக்கும் என நம்பலாம்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, நீண்ட நாளாக ரிலீஸாகாமல் இருக்கும் சர்வர் சுந்தரம் படத்தை வெளியிட முயற்சிகள் எடுத்துவருகிறார்கள். தவிர, டிக்கிலோனா, சபாபதி, கொரோனா குமார் ஆகிய படங்கள் லைன் அப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
**-ஆதினி**�,