கல்லூரி நண்பர்களை சந்தித்த நடிகர் மம்முட்டி

Published On:

| By Balaji

எண்பது, தொண்ணூறுகளில் புகழ்பெற்ற முன்னணி நட்சத்திரங்களாக தென்னிந்திய சினிமாவில் விளங்கியவர்கள், வருடத்திற்கு ஒருமுறை ஒன்றாக சந்தித்து தங்களது நினைவுகளை பரிமாறிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இதில் பெரும்பாலும் நடிகைகள்தான் அதிகமாக இருப்பார்கள். இவர்களுடன் ஜோடியாக நடித்த கதாநாயகர்கள் இன்றும் கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கிறார்கள். அதனால் ரஜினிகாந்த், கமலஹாசன் போன்றவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பார்கள். அதேசமயம் இவர்களில் ஒருவர்கூட தங்களது கல்லூரி கால நண்பர்களை சந்தித்து அளவளாவியது போன்று இதுவரை செய்திகள் எதுவும் வெளியானதில்லை.

ஆனால் தற்போது மலையாள நடிகர் மம்முட்டி சமீபத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் தனது கல்லூரி கால நண்பர்களுடன் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பி.ஏ., படித்த மம்முட்டி, அப்போது தன்னுடன் படித்த பலரையும் இந்த நிகழ்வில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து வெளியான புகைப்படங்களில், நண்பர்கள் கூட்டத்தில் 70 வயதான மம்முட்டி ஒருவரே மிகவும் இளமையாக காட்சி அளிக்கிறார்.

**அம்பலவாணன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share