nபா.ரஞ்சித் படத்திலிருந்து விலகிய நடிகர்!

Published On:

| By Balaji

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களைத் தொடர்ந்து பா.ரஞ்சித்தின் ஐந்தாவது படைப்பாக வெளியாகியிருக்கிறது ‘சார்பட்டா பரம்பரை’. சொல்லப் போனால், மெட்ராஸ் பட நேரத்திலேயே சார்பட்டாவுக்கான கதையை யோசித்துவிட்டார் ரஞ்சித். திரை வடிவமெடுக்க கால தாமதமாகியிருக்கிறது.

ஆர்யா, துஷாரா, பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடிப்பில் குத்துச்சண்டையை மையமாகக் கொண்ட கதையாக ஓடிடியில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது சார்பட்டா பரம்பரை.

இந்தப் படத்துக்குப் பிறகு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பிர்சா முண்டா படத்தை எடுப்பார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் திடீர் திருப்பமாக அடுத்த படத்தை அறிவித்தார்.

பா.ரஞ்சித் இயக்க இருக்கும் புதிய படத்துக்கு ‘நட்சத்திரம் நகர்கிறது’ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. நமக்குக் கிடைத்த தகவல்படி, சார்பட்டாவில் நடித்த துஷாரா லீட் ரோலில் நடிக்கிறாராம். அதோடு, நாயகி மையப்படுத்திய கதையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சார்பட்டாவில் ஆர்யாவின் மனைவியாக மாரியம்மாள் கேரக்டரில் பட்டையைக் கிளப்பியிருப்பார் துஷாரா.

இந்தப் படத்தில் இரண்டு ஹீரோக்கள் லீட் ரோலில் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அசோக் செல்வன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஒப்பந்தமானார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவும் இருக்கிறது. இந்த நிலையில், படத்திலிருந்து அசோக் செல்வன் விலகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

நிறைய படங்களைக் கையில் வைத்திருப்பதால் தேதிகள் ஒதுக்குவதில் சிக்கலாக இருப்பதால் படத்திலிருந்து விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது. பா.ரஞ்சித் மாதிரியான இயக்குநரின் படத்தில் நடித்துவிட பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இருப்பினும், கிடைத்த வாய்ப்பை தவற விட்டுவிட்டார் அசோக் செல்வன் என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அசோக் செல்வனுக்கு ‘ஓ மை கடவுளே’ படம் செம ஹிட். தற்போது, ப்ரியா பவானி ஷங்கருடன் ஹாஸ்டல் மற்றும் மோகன்லாலின் மரக்கார் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

**- தீரன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share