Hநடிகர் அர்ஜூனுக்கு கொரோனா!

Published On:

| By Balaji

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்கேற்று திரும்பியுள்ள நடிகர் அர்ஜூனும், கத்ரீனா கைஃப் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பியுள்ள இந்தி நடிகை கரீனா கபூர் கானும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் ,தெலுங்கு ,கன்னட சினிமாவில் பிரபல நடிகராக திகழ்பவர் அர்ஜூன். ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சர்வைவர் நிகழ்ச்சியில் அர்ஜூன் பங்கேற்று தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். சான்சிபார் தீவில் நடந்த இந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று நிறைவடைந்தது. நிகழ்ச்சியை முடித்து திரும்பிய அர்ஜூனுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து அர்ஜூன், “கொரோனா பரிசோதனையில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என் வீட்டில் என்னை தனிமைப்படுத்தி கொரோனாவுக்குரிய நெறிமுறைகளுடன் சிகிச்சை எடுத்து வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். நான் நலமாக உள்ளேன். தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் கான் மற்றும் அவரது தோழி அம்ரிதா அரோரா ஆகியோருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நடிகைகள் கடந்த சில வாரங்களாக நிறைய பார்ட்டிகளில் கலந்து கொண்டனர் என்றும் சரியான கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) கரீனா மற்றும் அம்ரிதாவுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்களை ஆர்டிபிசிஆர் சோதனைக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, கத்ரீனா கைஃப், விக்கி கவுஷல், ஊர்மிளா மடோன்கர், மலைக்கா அரோரா, அக்‌ஷய் குமார், அமித் சாத், கோவிந்தா போன்ற பல பாலிவுட் பிரபலங்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

**அம்பலவாணன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share