வாகா எல்லையில் நடிகர் அஜித்

Published On:

| By Balaji

தமிழ் சினிமா நடிகர்களில் வித்தியாசமான குணாம்சம் கொண்டவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர் நடிகர் அஜித்குமார்.

இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த வலிமை படப்பிடிப்பை முடித்துவிட்டு வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சமீபத்தில் தாஜ்மஹால் சென்றிருந்தார். தாஜ்மஹால் முன்பு அவர் எடுத்த போட்டோக்கள் அவரது வெறித்தனமான ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வைரல் ஆனது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (அக்டோபர் 19) இந்தியா – பாகிஸ்தானை இணைக்கும் வாகா எல்லைக்குச் சென்றுள்ளார் அஜித். அங்கு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடியுள்ளார். ராணுவ வீரர்களும் அஜித் உடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

அதோடு வாகா எல்லையில் தேசிய கொடியை ஏந்தி அஜித் போஸ் கொடுத்த புகைப்படங்கள் உள்ளிட்ட பிற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் வெளியிடப்பட்டு வைரலாகி வருகின்றன.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share