Eஅஜித்குமார் கேட்ட ஆலோசனை!

Published On:

| By Balaji

Eபடங்களில் நடிப்பது தவிர்த்து கார் ரேஸில் கலந்துகொள்வது, துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்பது, பைக்கில் நீண்டதூரம் பயணம் செய்வது ஆகியவற்றில் ஈடுபட்ட நடிகர் அஜித்குமார், பொழுதுபோக்கு கார் ரேஸில் பங்கேற்றபோது ஏற்பட்ட காயம் காரணமான தற்போது அதில் பங்கேற்பதைத் தொடரவில்லை.

அதன்பின் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தன் ஸ்போர்ட்ஸ் பைக்கை எடுத்துக் கொண்டு நீண்ட தூரம் பயணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ள அஜித்குமார், வலிமை படப்பிடிப்புக்கு இடையே நேரம் கிடைத்தபோது பைக் ரைடிங் சென்றுள்ளார். பைக் சம்பந்தப்பட்ட சண்டை காட்சியைப் படமாக்க ரஷ்யா சென்றபோது அங்கும்கூட ரைடிங் சென்ற அஜித்குமாருக்கு பைக்கில் உலகம் சுற்றி வர வேண்டும் என்று ஆசை.

இந்த நிலையில் அவர் ஆசைப்படுவது போன்று தன் பைக்கில் தனியாக உலகம் சுற்றி வந்திருக்கும் மாரல் யாசர்லூ என்கிற பெண் டெல்லிக்கு வந்திருக்கிறார். இதுகுறித்து அறிந்த அஜித்குமார் டெல்லிக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். மாரல் தன் பைக்கில் 64 நாடுகளைக் கடந்திருக்கிறார்.

எதிர்காலத்தில் தன் பைக்கில் உலகத்தைச் சுற்றிவரும் திட்டத்தில் இருக்கும் அஜித், அந்தப் பெண்ணிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அஜித்தின் ஊடக தொடர்பாளர் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் விரைவில் தன் உலகப் பயணத்தை அஜித்குமார் தொடங்க வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share