சிம்புவின் அடுத்தப் படத்தை இயக்கப்போகும் பிரபல நடிகர் !

entertainment

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, கெளதம் மேனன் இயக்கத்தில் ‘நதிகளில் நீராடும் சூரியன்’ படமும், கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ படமும் லைன் அப்பில் இருக்கிறது. அதோடு, வேல்ஸ் நிறுவனத் தயாரிப்பில் கோகுல் இயக்கத்தில் ‘கொரோனா குமார்’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதோடு, சுதா கொங்கரா இயக்கத்தில், மிஷ்கின் இயக்கத்தில், டிகே இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தைகளும் போய்க் கொண்டிருக்கிறது.

மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால், சம்பளம் உட்பட படத்தின் பட்ஜெட் வரை ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இன்னும் உறுதியாகாமல் இருக்கிறது.

இந்நிலையில், ஏ.ஜிஎஸ். நிறுவனத்துக்கு சிம்பு நடிக்க இருக்கும் படத்துக்கு இயக்குநரை டிக் செய்துவிட்டது தயாரிப்பு நிறுவனம்.

நடிகராகவும், இயக்குநராகவும் செம பிஸியாக இருக்கிறார் பிரபுதேவா. தமிழில் எக்கச்சக்கப் படங்கள் இவர் நடித்து வெளியாக தயாராகிவருகிறது. அதாவது, தேள், யங் மங் சங் மற்றும் ஊமை விழிகள் படங்கள் தயாராகிவருகிறது. அதோடு, மஞ்சப்பை இயக்குநர் ராகவன் படத்தின் யாமிருக்க பயமேன் படத்தை இயக்கிய டிகே இயக்கத்திலும் ,சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்திலும் நடிக்கிறார்.

சமீபத்தில், பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்க ‘ராதே’ படம் வெளியானது. படம் பெரிதாகப் போகவில்லை. இந்தப்படத்துக்குப் பிறகு, பாலிவுட்டில் பிரபுதேவாவுக்கு கொஞ்சம் நெகட்டிவ் ரெஸ்பான்ஸ் தான் நிலவுகிறது. அதனால், தமிழில் கவனம் செலுத்தத் துவங்கியிருக்கிறார்.

அப்படி, தமிழில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு வந்த பிரபுதேவாவை தேடிப் பிடித்திருக்கிறது ஏ.ஜிஎஸ். நிறுவனம். சிம்பு நடிக்க இருக்கும் படத்தை பிரபுதேவா இயக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். விரைவிலேயே படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும்காதல் மற்றும் வெடி படங்களை இயக்கினார் பிரபுதேவா. அதன்பிறகு, கடந்த எட்டு வருடமாக தமிழில் எந்தப் படமும் இயக்கவில்லை. மீண்டும் இயக்குநராக தமிழுக்கு வருகிறார் பிரபுதேவா. வெல்கம் !

**-ஆதினி**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.