6கொரோனா எனும் மகாகவி!

Published On:

| By Balaji

கொரோனா வைரஸை உயிர்க்கொல்லி என்று உலகமே அழைத்துக்கொண்டிருக்க, அதனை ‘மகாகவி’ என்று குறிப்பிட்டு ட்வீட் செய்திருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.

அருண்ராஜா மாஸ்டர் படத்தில் எழுதிய குட்டி கதை பாடல் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்க, இந்தப்படம் பற்றிய அப்டேட் ஏதாவது வெளியிடப்படுமா என்று ரசிகர்கள் ஆர்வமாக அவரது ட்விட்டர் கணக்கை ஃபாலோ செய்துகொண்டிருக்க, அதில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு செயல்முறைகளை அறிவித்திருக்கிறார் அருண்ராஜா.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த செயல்முறைகளை விளக்கும் அறிவிப்பினை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அருண்ராஜா அதில் “சாதிகள் இல்லையடி பாப்பா” என்பதைக் குறிப்பிட்டு, அதனை விளக்கும் வகையில் “எல்லா சாதியையும் சமமாகப் பார்க்கும் மகாகவி கொரோனா” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இயற்கைப் பேரழிவுகள் ஏதாவது நடைபெறும்போதெல்லாம் அனைத்து சமூக, கலாச்சார தடைகளையும் உடைத்து மனிதம் வெளிப்படுவதை பல தருணங்களில் இந்தியா கண்டிருக்கிறது. அதேபோல, கொரோனா வைரஸின் பாதிப்பிலிருந்தும் இந்திய மக்களை காத்திட சாதி மறந்து ஒன்றிணைய வேண்டும் என்று குறிப்பிடும் விதத்தில் அருண்ராஜா இதனை வெளியிட்டிருக்கிறார்.

சாதிகள் இல்லையடி பாப்பா #எல்லாசாதியையும்சமமாகபார்க்கும் #மகாகவிகொரோனா#CoronaAlert pic.twitter.com/0Q2cOFhyx1

— Arunraja Kamaraj (@Arunrajakamaraj) March 4, 2020

**-சிவா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share