X800-ல் அரசியல்: உண்மையை உடைத்த டீஜே!

entertainment

800 திரைப்படத்தில், இலங்கை ஸ்பின் பவுலர் முத்தையா முரளிதரனின் கேரக்டரில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. அங்கும் இங்குமாக செய்தி வெளியாகிக்கொண்டிருந்ததைக் கடந்து, படத்தின் டைட்டில் போஸ்டர் ரிலீஸானதிலிருந்து, விஜய் சேதுபதி அந்தப் படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு உருவாகிக்கொண்டிருக்கிறது. திரைப்படக் குழுவினரின் தரப்பில், இது வெறும் விளையாட்டுத் திரைப்படம் என்ற கோணத்திலேயே புரமோட் செய்யப்பட்டது. படத்தில் எவ்வித அரசியலும் இடம்பெறவில்லை என்று சத்தியம் செய்யாத குறையாகப் பேசியது இத்திரைப்படத்தைத் தயாரிக்கும் Dar media நிறுவனம். ஆனால், அந்தத் திரைப்படத்தில் அரசியல் இருக்கிறது எனக் கூறியிருக்கிறார், இந்தப் படத்தில் இளவயது முத்தையா முரளிதரனாக நடிக்க தயாரிப்பு தரப்பால் அணுகப்பட்ட நடிகர் டீஜே.

அசுரன் திரைப்படத்தில் தனுஷின் மூத்த மகனாக நடித்த டீஜே, தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களுக்கான கதையைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அப்படி டீஜே சமீபத்தில் கேட்ட கதை தான் முத்தையா முரளிதரனின் வாழ்வியலை படமாக்கும் 800 திரைப்படத்தின் கதை. இந்தப் படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க, இள வயது முரளிதரனாக நடிக்க டீஜே-வுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. தனது கேரக்டர் பயணமாகும் கதைக்களத்தைப் பற்றி டீஜே கேட்டபோது, படத்தின் கதையை அவரிடம் சொல்லியிருக்கிறது படக்குழு. கதை முழுவதையும் கேட்ட டீஜே, ‘இந்தக் கதையில் என்னால் நடிக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

காரணம் கேட்டவர்களிடம் “என்னுடைய அம்மா ஒரு ஈழத் தமிழ்ப் பெண். இலங்கையில் ஏற்பட்ட கொடூரங்கள் என்னவென்று அவருக்கு முழுவதுமாகத் தெரியும். அவர் என்னிடம் அதனைக் கூறியிருக்கிறார். ஆனால், நீங்கள் படத்தில் எடுக்க நினைப்பது வேறு. என்னால் இந்தப் படத்தில் நடிக்க முடியாது” என்று அவர்களிடம் கூறியதை டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் டீஜே.

800 படத்தில் இலங்கையின் அரசியல் குறித்து பேசப்படவில்லை என படக்குழுவினரும், அப்படி அரசியல் பேசப்பட்டிருந்தாலும் ஒரு திரைப்படத்தை கலையாக பார்க்கவேண்டுமே தவிர, அரசியலாகப் பார்க்கக்கூடாது என்று சில திரைப்பட ஆர்வலர்களும் கூறிய நிலையில், படத்தின் கதையைக் கேட்டவரே உண்மையை பொதுவில் போட்டு உடைத்துவிட்டதால், 800 படத்துக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான நிலை மேலும் அதிகரித்திருக்கிறது.

-முத்து-

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *