mகலாவதி சாதனையை முறியடித்த அரபிக்குத்து!

entertainment

தென்னிந்திய அளவில் புதிய சாதனை என மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா படத்தின் முதல் சிங்கிளான கலாவதி பாடலின் சாதனையை ஒரு நாள் கூட கொண்டாடவிடவில்லை பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து.

கடந்த சில நாட்களாகவே விஜய் ரசிகர்களுக்கும், மகேஷ்பாபு ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் யார் பெரியவர் என்கிற சண்டை நடந்து வந்தது. விஜய்யின் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிளான அரபிக்குத்து பாடலும், மகேஷ்பாபுவின் தெலுங்குப் படமான சர்க்காரு வாரி பாட்டா படத்தின் முதல் சிங்கிளான கலாவதி பாடலும் நேற்று பிப்ரவரி 14 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கலாவதி பாடல் ஒரு நாள் முன்னதாக பிப்ரவரி 13ம் தேதியன்று வெளியானது. தென்னிந்திய அளவில் ஆல் டைம் ரெக்கார்டுஎன 24 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகள், 8 லட்சம் விருப்பங்கள் என சர்க்காரு வாரி பாட்டாகுழு கொண்டாட தொடங்கியது. ஆனால், அவர்களது மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் சில மணி நேரங்கள் மட்டுமே நீடித்தது.

பீஸ்ட் படத்தின் முதல் பாடல் அரபிக் குத்து நேற்று(14.02.2022) மாலை 6 மணிக்கு வெளிவந்தது.
வெளிவந்த 5 நிமிடத்தில் 3.75 லட்சம் பார்வையாளர்களை அரபிக் குத்து பாடல் பெற்றது. அடுத்து வந்த 30 நிமிடங்களுக்குள் 2 மில்லியன்களுக்கு மேலான பார்வையாளர்களை அரபிக் குத்து பெற்றுள்ளது. அதே போல் 30 நிமிடத்திற்குள் சுமார் 5 லட்சம் விருப்பங்களை பெற்று மற்றொரு சாதனையையும் படைத்து அஜித்குமாரின், ‘நாங்க வேற மாறி’ பாடலின் சாதனையை முறியடித்துள்ளது.

இந்த பாடல் தான், நடிகர் விஜய்யின் பாடல்களில் மிக வேகமாக 5 லட்சம் விருப்பங்களை 10 நிமிடங்களில பெற்ற முதல் பாடல் என்று தெரியவந்துள்ளது.

கலாவதி’ பாடல் 24 மணி நேரத்தில் படைத்த சாதனையை அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக ‘பீஸ்ட்’ சிங்கிளான ‘அரபிக்குத்து’ முறியடித்துவிட்டது. நேற்று மாலை யூ டியூபில் வெளியான இந்தப் பாடல் இதுவரையிலும் 20 மில்லியன் பார்வைகள், 2 மில்லியன் விருப்பங்கள் என 17 மணி நேரத்திற்குள்ளாகவே மிகப் பெரிய சாதனையைப் படைத்துள்ளது.

**-இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *