தமிழ் சினிமாவில் 2002ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் செல்வராகவன். படம் முழுவதையும் இவர் இயக்கி இருந்தாலும் தணிக்கையில் தடை ஏற்படாமல் இருக்க அவரது தந்தை கஸ்தூரிராஜா பெயரில் விண்ணப்பிக்கப்பட்டது.
செல்வராகவன் இதுவரை தமிழில் துள்ளுவதோ இளமை(தனுஷ்) காதல் கொண்டேன்(தனுஷ்)
7G ரெயின்போ காலனி,(ரவி கிருஷ்ணா) புதுப்பேட்டை(தனுஷ்) யாரடி நீ மோகினி(தனுஷ்) ஆயிரத்தில் ஒருவன்(கார்த்தி) மாலைநேரத்து மயக்கம் (பாலகிருஷ்ணா) இரண்டாம் உலகம்(ஆர்யா), என்.ஜி.கே(சூர்யா) என பத்துப்படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார். இருப்பினும் தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களுள் ஒருவராக அடையாளப்படுத்தப்படுகிறார். செல்வராகவன்,தனுஷ் இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கு பின் தற்போது ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
வி .கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே விஜய்யின் பிகில், ஆர்யாவின் மகாமுனி போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று காலை தொடங்கியது. கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதியே துவங்க இருந்தது. ஆனால் தனுஷின் கால்ஷீட் பிரச்சனையால் படப்பிடிப்பு துவங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய தகவலை இன்று செல்வராகவன் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு இடைவிடாது நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
**-இராமானுஜம்**
�,