உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி இன்று (ஜூன் 2) இங்கிலாந்துக்குப் புறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 18 முதல் 22 வரை நடைபெறுகிறது. அதன்பிறகு இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கி, செப்டம்பர் 14 அன்று முடிவடைகிறது.
இங்கிலாந்தில் நான்கு மாதங்கள் தங்க வேண்டியிருப்பதால் குடும்பத்தினருடன் இங்கிலாந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என வீரர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து வீரர்களின் கோரிக்கையை இங்கிலாந்து அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் தற்போது இங்கிலாந்து செல்லவுள்ளார்கள்.
3ஆம் தேதி சவுத்தம்டன் சென்றடையும் இவர்கள் அங்குள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். இங்கிலாந்து செல்லும் இவர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதற்கான சான்றிதழை கொண்டு செல்ல வேண்டும்.
இங்கிலாந்து சென்றடைந்ததும் இவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதோடு தனிமைப்படுத்தலின் போதும் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இங்கிலாந்து பயணத்துக்கான 20 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள்…
வீராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், விகாரி, விருத்திமான் சகா, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர்.
**-ராஜ்**
.�,