%
அசுரன், என்னை நோக்கிப் பாயும் தோட்டா ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து வெளியான பட்டாஸ் திரைப்படம் நடிகர் தனுஷுக்கு தோல்வியைக் கொடுத்தது. ஆனால், அந்தத் தோல்வியை கண்டுகொள்ளாமல் அவரது அடுத்த படங்களுக்கு ரசிகர்களை உடனடியாக நகர வைத்தது அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு தான்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம், கார்த்திக் நரேன் இயக்கத்தில் டி43 ஆகிய இரு படங்கள் தனுஷுக்கு கைவசம் இருக்கின்றன. ஜிகர்தண்டா மாதிரியான டான் திரைப்படத்தைக் கொடுத்த கார்த்திக் சுப்பராஜின் இண்டர்நேஷனல் வெர்ஷன் தான் ஜகமே தந்திரம் என்று சொல்லக்கூடிய விதத்தில் துப்பாக்கிகளும், கொலைகளும் என அட்டகாசமான மோஷன் போஸ்டர் ரிலீஸாகி அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்குக்கு உயர்த்தியிருக்கின்றன.
மே மாதம் ரிலீஸாகவிருக்கும் இத்திரைப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டாக இப்போது ரிலீஸாகத் தொடங்கியிருக்கிறது. மோஷன் போஸ்டர் மூலம் டைட்டிலையும், தனுஷின் கேரக்டரையும் வெளியிட்ட படக்குழு தற்போது தனுஷ் மூலம் அவரது கேரக்டரின் பெயரை அறிவித்திருக்கிறது.
படத்தில் இடம்பெறும் புதிய போஸ்டர் ஒன்றை ரிலீஸ் செய்த தனுஷ் “சுருளி சீக்கிரமாக வருகிறான்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
#suruli He is coming soon pic.twitter.com/LTM2dVobhU
— Dhanush (@dhanushkraja) March 9, 2020
**-சிவா**�,”