நடிகை பிந்துமாதவி 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘கழுகு’ ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பிந்துமாதவி. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர்களை அவர் சம்பாதித்தார். தற்போது, ‘யாருக்கும் அஞ்சேல்’ மற்றும் ‘மாயோன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துவரும் அவர் பொதுமுடக்கம் காரணமாக தனது வீட்டிலேயே முடங்கியுள்ளார்.
இந்த நிலையில் அடுத்த 14 நாட்களுக்குத் தனது குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிந்துமாதவி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் வீடியோ ஒன்றையும் அவர் இணைத்துள்ளார்.
Oh damn.. ????
Pls be safe and hope that person recovers soon— Shanthnu ???? ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) May 31, 2020
அந்தப் பதிவில், **“நான் வசிக்கும் குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இங்கு வசிக்கும் நாங்கள் அனைவரும் அடுத்த 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தப்பட்டுள்ளோம்”** என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் மாநகராட்சி ஊழியர்கள் அந்தக் குடியிருப்பின் கேட்டை இழுத்து மூடி, போஸ்டர் ஒட்டுவது இடம்பெற்றுள்ளது. அந்தப் பதிவைப் பார்த்த நடிகர் சாந்தனு, ‘தயவுகூர்ந்து பாதுகாப்பாக இருங்கள். பாதிக்கப்பட்ட நபர் விரைவில் குணமடைவார் என நம்புகிறேன்’என்று கமெண்ட் செய்துள்ளார். அதே போன்று பிந்துமாதவியின் திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்களும், அவரிடம் ‘கவனமாக இருங்கள்’ என்று கூறி வருகின்றனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”