விஷாலின் 33 ஆவது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். எனிமி பட தயாரிப்பாளர் வினோத் தயாரிக்கிறார். பன்மொழிப்படமாக இது உருவாக இருப்பதாக விஷால் சொல்லியிருந்தார்.
இந்தத் திரைப்படத்திற்கு ‘விஷால் 33’ என்று தற்காலிகமாகப் பெயர் வைக்கப்பட்டது. இந்த நிலையில் 2022 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் பெயரைப் படக்குழு வெளியிட்டது.
அதன்படி, இந்தப் படத்திற்கு ‘மார்க் ஆண்டனி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்குப்பின் அந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவை வில்லன் கதாபாத்திரத்திற்கான நடிகராக முன்னணி நடிகர்களும், இயக்குநர்களும் சிபாரிசு செய்ய தொடங்கியதால் அவரது தேவை அதிகரித்தது.
ரகுவரன் மறைவுக்கு பின் அந்த வெற்றிடத்தை நடிகர் பிரகாஷ்ராஜ் நிரப்பினார். அவர் எல்லா மொழிகளிலும் நடிக்க தொடங்கியபின் தமிழ் சினிமாவிற்கு அவரது கால்ஷீட் கிடைப்பது எல்லோருக்கும் எளிதாக இல்லை. விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் வில்லன் கேரக்டருக்கு பொருந்திபோனாலும் ரகுவரன், பிரகாஷ்ராஜ் இடத்தை இவர்களால் முழுமையாக நிரப்ப முடியவில்லை.
இந்த நிலையில்தான் மாநாடு வெற்றி எஸ்.ஜே.சூர்யாவை அடையாளப்படுத்தி சென்றிருக்கிறது. இன்றைய சினிமா வியாபாரம், வசூல் நிலவரம் இவற்றை பற்றி கணக்கில் கொள்ளாமல் தனது சம்பளத்தை , நடிகர்களுக்கு ஏற்ப அதிகமாக கேட்க தொடங்கியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. பன்மொழிப் படம், வணிக நோக்கம் கருதி
மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் நடிப்பதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘ கடவுளே எல்லா நல்ல கதையையும் என்கிட்டவே அனுப்புறீயே’ என்றும் ‘இந்தக் கதையை மாநாடு-2 என்றே சொல்லலாம் அந்த அளவுக்குத் திரைக்கதை உள்ளது’ என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தப்படத்தில் நடிப்பதற்காக ஆறு கோடி சம்பளம் கேட்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. தயாரிப்பாளரோ நான்கு கோடியில் நின்றிருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். அதனால் அவர் வேண்டாம் என்று படக்குழு முடிவெடுத்திருக்கிறது.
அதன்பின், கதை பிடித்துப் போனதால் எஸ்.ஜே.சூர்யா சம்பளத்தை குறைத்துக்கொள்வதாக கூற தயாரிப்பாளர் தரப்பும் கூறியதை காட்டிலும் அதிகரிக்க ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இறுதியாக ஐந்து கோடி என்று சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
**-இராமானுஜம்**
�,