மண்டேலா இயக்குநர் படத்தில் சிவகார்த்திக்கேயன்?

Published On:

| By Balaji

சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டான். அறிமுக இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படம் பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. அதேசமயம், புது இயக்குநர் அசோக் இயக்கத்தில் சிங்கப்பாதை எனும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. அதுபற்றியும் மேற்கொண்டு எந்தத் தகவலும் இல்லை.

இந்நிலையில், அடுத்து சிவகார்த்திகேயன் தெலுங்குப் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் அதற்கான வெள்ளைக்கார கதாநாயகி தேடலில் இருப்பதாகவும், ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என தகவல்கள் கசிந்தது

இதற்கிடையில் யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் கசிந்தது.

இதுகுறித்து இயக்குநர் மடோன் அஸ்வினிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, இப்படி ஒரு தகவல் எப்படி வெளியானது என்று எனக்கே தெரியவில்லை. மண்டேலா படம் பார்த்துவிட்டு என்னைப் பாராட்டினார் சிவகார்த்திகேயன். அதன்பின் இருவரும் இணைந்து படம் செய்யலாம் என்றும் பேசினோம். ஆனால் எதுவும் உறுதியாகவில்லை.

அப்படி உறுதியானால் அது உடனடியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதுவரை இப்படி வரும் தகவல்களில் உண்மையில்லை. நம்பவேண்டாம்” என்று கூறினார்.

**-அம்பலவாணன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share