தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்காத அமிதாப் பச்சன்!

Published On:

| By Balaji

இந்தியாவின் 2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைக்கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றுவருகிறது.

இந்த 66-ஆவது தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லி விக்யான் பவனின் நடைபெற்றுவருகிறது. இந்த விருதுகளைத் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு வழங்கவுள்ளார். தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பாரம் திரைப்படம் பெறுகிறது.

மகாநடி திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை கீர்த்தி சுரேஷ் பெற்றுக்கொண்டார். சிறந்த நடிகருக்கான விருதை அந்தாதுன் திரைப்படத்திற்காக நடிகர் ஆயுஷ்மான் குர்ரானாவும், ‘தி சர்ஜிகல் ஸ்டிரைக்’ திரைப்படத்திற்காக விக்கி கவுசலும் பெற்றுக்கொண்டனர்.

இந்த விழாவில் தாதாசாகேப் பால்கே விருது அமிதாப் பச்சனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், தமது மருத்துவர் தம்மை பயணம் செய்ய அனுமதிக்கவில்லை. அதனால் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை, என்று அமிதாப் பச்சன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தின் சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்திற்கான விருது, சிறந்த குணசித்திர நடிகைக்கான சிறப்பு விருது என இரு தேசிய விருதுகளை சுடானி ஃப்ரம் நைஜீரியா திரைப்படம் பெற்றது. குடியரசு திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாங்கள் தேசிய விருது வழங்கும் விழாவைப் புறக்கணிப்பதாக இப்படத்தின் படக்குழுவினர் முன்னதாக அறிவித்திருந்தனர்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share