செஸ்: ஐந்தாவது முறையாக உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் சாதனை!

Published On:

| By Balaji

g

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரஷ்யாவின் இயன் நெப்போம்னியாட்சியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன்.

மொத்தம் 14 ஆட்டங்களாக நடைபெற்ற இவர்களுக்கெதிரான சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் பத்து ஆட்டங்கள் ஏற்கெனவே நடைபெற்று முடிந்திருந்தன. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று துபாயில் நடைபெற்ற 11ஆவது போட்டியில் கார்ல்சன் வெற்றி பெறவே, இன்னும் மூன்றும் ஆட்டங்கள் மீதமிருக்க 7.5:3.5 என்ற கணக்கில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.

இந்த ஆட்டத்தின் 23ஆவது மூவில் அற்ப தவறொன்றை செய்தார் நெப்போம்னியாட்சி. அதை முழுமையாகப் பயன்படுத்தி கொண்ட கார்ல்சன் அதற்கேற்றவாறு தன் திட்டங்களை மாற்றி வியூகங்கள் அமைத்து 49 மூவில் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

முதல் ஐந்து ஆட்டங்கள் தொடர்ந்து டிராவில் முடிந்ததையடுத்து ஆறாவது ஆட்டத்தில் தன் முதல் வெற்றியை பதிவு செய்தார் கார்ல்சன். அந்தத் தோல்விக்குப் பிறகு அடுத்தடுத்த ஆட்டங்களில் கார்ல்சனின் தாக்குதலுக்கு நெப்போம்னியாட்சியால் தாக்குப்பிடிக்க இயலவில்லை.

தன் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை கார்ல்சன் தக்கவைத்து கொள்வது இது நான்காவது முறை. இதற்கு முன் 2013ஆம் ஆண்டு சென்னையில் நடந்த போட்டியில் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தியவர் இந்த கார்ல்சன். தொடர்ந்து 2014ஆம் ஆண்டில் விஸ்வநாதன் ஆனந்த், 2016-ல் செர்கே கர்ஜகின், 2018-ல் ஃபாபியானோ கருயானோ ஆகியோரை வீழ்த்தியவர் இந்த சாதனையாளர்.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share