aகாதலுக்கு வயதில்லை: ராஷ்மிகா மந்தனா

Published On:

| By Balaji

ஆசை வெட்கமறியாது, காதலுக்கு கண்ணில்லை என்பது இளம் வயதினர் அதிகம் பேசக்கூடிய பேச்சாக இருக்கும். சுல்தான் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா ‘காதலுக்கு வயதில்லை’ என்ற வார்த்தைக்குப் புதிய விளக்கம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

தற்போது தெலுங்கில் ‘புஷ்பா’, இந்தியில் ‘மிஷன் மஜ்னு’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இந்தப் படத்துக்காக சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பத்திரிகையாளர் ஒருவர் ராஷ்மிகாவிடம், “உங்களை விட வயது குறைந்தவரை காதலிப்பீர்களா?” எனக் கேட்டிருக்கிறார்.

அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, “நம்மை விட இளையவரைக் காதலிப்பதில் என்ன தவறு இருக்கிறது. காதலுக்கு வயது ஒரு தடையில்லை. அவர் நமது எண்ணங்களை மாற்றாதவராக, நம்மிடம் ஆதிக்கம் செய்யாதவராக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ராஷ்மிகாவுக்கு இதற்கு முன்பு கன்னட நடிகர் ரக்க்ஷித் ஷெட்டியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், இருவருமே அதை ரத்து செய்துவிட்டனர். அதன் பிறகுதான் தெலுங்கில் பிஸியாக நடிக்க ஆரம்பித்தார் ராஷ்மிகா என்பது குறிப்பிடத்தக்கது.

**-அம்பலவாணன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share