ஹர்பஜன் சிங்குடன் பிக் பாஸ் புகழ் லாஸ்லியா ஜோடி சேரும் பிரண்ட்ஷிப் படத்தில் அர்ஜுன் இணைந்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்றவர் லாஸ்லியா. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியாவை ஹீரோயினாகவே மாற்றியுள்ளது. ‘பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கவுள்ள பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கவுள்ளார்’. இந்த செய்தி வந்ததுமே, ஹர்பஜன் ரசிகர்களும் லாஸ்லியா ரசிகர்களும் ஒரே நேரத்தில் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்தநிலையில் ஹர்பஜன்-லாஸ்லியா இணைந்து நடிக்கும் இந்தத்திரைப்படத்தில் அர்ஜுன் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Action king @akarjunofficial on board in @harbhajan_singh & #Losliya #Friendship @JPRJOHN1 @ShamDirector @ImSaravanan_P @RIAZtheboss #SeantoaStudio #cinemaasstudio pic.twitter.com/l0ifmNo6zB
— CINEMAAS STUDIOS (@CinemaassS) February 17, 2020
ஆக்ஷனில் மிரட்டும் ஹீரோவாக ‘ஆக்ஷன் கிங்’ என்ற பெயர் பெற்றவர் நடிகர் அர்ஜுன். தற்போது ஹீரோவுக்கு நிகரான முக்கியக் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘ஹீரோ’ திரைப்படத்தில் அர்ஜுனின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் அர்ஜுன் நடிக்கிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகம் அளித்துள்ளது.
பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் அர்ஜுன் யாருடன் பிரண்ட்ஷிப் வைத்துக்கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பெரும் அளவில் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இந்தப்படத்தை இயக்கவுள்ளனர்.�,”