தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா அவர் அப்பா இளையராஜா போன்று மௌனமாக எதையும் கடந்து போகிறவர், எந்த சர்ச்சையிலும் சிக்கிகொள்ளாதவர் எனக் கூறுவார்கள். லட்சக்கணக்கானவர்கள் பின் தொடரக்கூடியது யுவன்சங்கர் ராஜாவின் முகநூல் பக்கம். இதில் அவர் போட்ட பதிவுக்கு சிலர் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் கூறிய பதிலும் விவாதப் பொருளாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது . கடந்த ஏப்ரல் 27ம் தேதி இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ரானில் 8.30 அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள வசனமான அவர்களும் சூழ்ச்சி செய்துகொண்டிருந்தனர்,அல்லாவும் அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான், சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லா மிகவும் மேன்மையுடையவன்” என பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் ரசிகர் ஒருவர்” யுவன் சங்கர்ராஜாவாக உங்களை நான் ரசிக்கிறேன் இது மதத்தைப் பரப்புவதற்கான தளமல்ல இதுதொடர்ந்தால் உங்கள் பக்கத்தில் இருந்து விலகிவிடுவேன்” என பதிவிட்டிருந்தார். அதற்கு யுவன் LEAVE என பதில் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து வேறொருவர் உங்கள் பெயரை மாற்றுங்கள் என பதிவிட” நான் இந்தியன், நான் தமிழன், நான் ஒரு முஸ்லிம் ஆவேன், முஸ்லிம்கள் அரேபியாவில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது உங்கள் வெறுப்பை காட்டுகிறது . மத நம்பிக்கை என்பது வேறு, தேசியம் என்பது வேறு வெறுப்பை விதைக்காதீர்கள் சகோதரா என பதில் கூறியிருந்தார். யுவன் சூழ்ச்சியாளர்களிடமிருந்து இறைவன் காப்பாற்றுவான் என்ற வசனத்தை யுவன் இந்த சமயத்தில் பதிவிட்டது ஆட்சியாளர்களை எதிர்த்து போடப்பட்ட பதிவாக இருக்கலாம் என்று அதே பின்னூட்டத்தில் சிலர் பதிவிட்டுள்ளனர்.
உங்களுக்கான சுதந்திரம் உங்களுக்குப் பிடித்ததை நீங்கள் எழுதுகிறீர்கள் அது உங்கள் உரிமை இதை கேட்க யாருக்கும் உரிமை இல்லை என யுவனுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பாக யுவன்சங்கர்ராஜா இஸ்லாம் மதத்தில் இருந்து மீண்டும் தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்ப வரப் போகிறார் என் மதவாதிகள் பலரும் தங்கள் முகநூல் பக்கங்களில் எழுதிவந்தனர். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் கூறப்பட்டு வந்த நிலையில் யுவன்சங்கர்ராஜாவின் முகநூல் பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. தற்போது யுவன் தழுவியுள்ள இஸ்லாம் மதத்திற்கு ஆதரவான பதிவா அல்லது அரசியல் ரீதியான பதிவா என்பதை விளக்க வேண்டியது யுவன்சங்கர்ராஜா பொறுப்பாகும், என்கின்றனர் யுவனின் நலம் விரும்பிகளும், அவரை விமர்சிப்பவர்களும்.
**-ராமானுஜம்**
.�,”