20 கோடியில் விக்கிக்கு பரிசளித்த நயன்

entertainment

நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் சென்னை- மகாபலிபுரத்தில் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. திருமணம் முடித்த கையோடு தம்பதிகளாக திருப்பதிக்கு சுவாமி தரிசனத்திற்கு சென்றனர்.

பின்பு இன்று சென்னையில், தாஜ் ஹோட்டலில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பும் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய விக்னேஷ் சிவன், “முதல் முதலாக நயன்தாராவை சந்தித்து கதை சொன்ன இடம் இது தான். அதனால், அந்த செண்டிமெண்ட்டுக்காகவே இந்த இடத்தை தேர்ந்தெடுத்து எங்கள் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை தொடங்கி உள்ள இந்த வேளையில் நன்றி சொல்ல நினைத்தோம்” என பேசினார்.

அதே போல, நயன்தாராவும் “எங்கள் வாழ்க்கைக்கும், சினிமா பயணத்திற்கும் உங்கள் அனைவரது ஆசீர்வாதமும் தேவை. இவ்வளவு நாள் நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி என தெரிவித்தார். திருமணத்தின் போது விக்னேஷ் சிவன், நயன்தாராவிற்கு 8 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க வைர நகைகளை பரிசளித்துள்ளார். அதேபோல நயன்தாராவும் விக்னேஷ் சிவனுக்கு 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா ஒன்றை பரிசளித்துள்ளார்.

தற்போது, விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடியின் தங்குமிடம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் எக்மோரில் உள்ள பிரபல அபார்ட்மென்ட் ஒன்றில் இயங்கி வருகிறது. தற்பொழுது திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து அங்கேயே வசிப்பார்களா அல்லது நயன்தாரா பரிசளித்துள்ள சொகுசு பங்களாவுக்கு குடியேறுவார்களா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *