vஎங்கெங்கும் விஜய்: இது ஒரு புரமோஷன் ஆபரேஷன்!

Published On:

| By Balaji

மாஸ்டர் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் உடனுக்குடன் கொடுத்துவரும் மின்னம்பலம், அந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு ரசிகர்களுக்கு அனுமதி இருக்காது என்பதையும் குறிப்பிட்டிருந்தது. அதை, மாஸ்டர் படக்குழுவினர் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.

மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையிலுள்ள ஒரு ஹோட்டலில் நடைபெறுவதையும் அங்கு ரசிகர்களுக்கு [அனுமதி இல்லை](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/entertainment/2020/03/02/44/vijay-master-movie-audil-launch-no-entry-to-venue-for-vijay-fans) என்பதையும் மின்னம்பலத்தில் கூறியிருந்தோம். இதை சனிக்கிழமை (07.03.2020) சன் டிவி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் (மாஸ்டர் இசை வெளியீடு 15ஆம் தேதி சன் டிவியில் லைவ்வாக ஒளிபரப்பப்படும் என்று) ரசிகர்களுக்குக் கூறினார்கள். இதை, மாஸ்டர் திரைப்படத்தைத் தயாரிக்கும் சேவியர் பிரிட்டோவின் XB film Creators நிறுவனமும் குட்டி டீசர் ஒன்றை வெளியிட்டு உறுதி செய்திருக்கிறது.

வழக்கமாக விஜய் சொல்லும் ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற வார்த்தைகளுடன் தொடங்கும் புரமோ ஒன்றைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. வீட்டிலுள்ள குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து தொலைக்காட்சியின் மூலம் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் அந்த புரமோவில், ஒரு குட்டி கதை சொல்றேன் என்ற வசனம் முடிந்ததும், மாஸ்டர் படத்தின் குட்டி கதை பாடலை ஒலிக்கவிட்டிருக்கின்றனர்.

Nanbas and Nanbis, get ready to watch the #MasterAudioLaunch with your friends and family this time live on @SunTV#MasterUpdate #Master@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @anirudhofficial @jagadishbliss @Lalit_sevenscr @imKBRshanthnu @MalavikaM_ @andrea_jeremiah pic.twitter.com/RbkUjeHL5E

— XB Film Creators (@XBFilmCreators) March 8, 2020

புரமோவின் மூலமே, நிகழ்ச்சியை வீட்டிலேயே அமர்ந்து பாருங்கள். நிகழ்ச்சி நடக்கும் ஹோட்டலுக்கு வர வேண்டாம் என்பதை உணர்த்தும் வகையில் ஒரு புரமோவைத் தயார் செய்திருக்கின்றனர். சென்னையில் நடைபெறப்போகும் அந்த விழாவில் விஜய் என்ன பேசப் போகிறார் என்பதைக் கேட்க பல தரப்பினரும் ஆர்வமாக இருக்கின்றனர். எனவே, மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியின் மூலம் டி.ஆர்.பி ரேட்டிங்கில் சாதனையைப் படைக்க தயாராகி வருகிறது சன் டிவி குழுமம். பேப்பர், தொலைக்காட்சி, இன்டர்நெட், சமூக வலைதளங்கள் என மாஸ்டர் படத்தின் இசை வெளியீடு முடியும் வரை எங்கு பார்த்தாலும் இந்தப் பெயராகவே தெரியுமளவுக்கு புரமோஷன் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது என்கின்றனர் படக்குழுவினர்.

**-புகழ்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share