மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகையான சொபிதா துலிபலா இணைந்திருக்கிறார்.
இந்திய சினிமாவின் பெருமையாகக் கருதப்படும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் நடித்துவருகின்றனர். முதல் ஷெட்யூலில் கார்த்தி-ஜெயம் ரவி-அஷோக் செல்வன் ஆகியோர் இடம்பெற்ற காட்சிகள் ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. அடுத்த ஷெட்யூல் சென்னையில் நடைபெறுவதாக இருக்கும் சூழலில், இந்தப் படத்தில் பாலிவுட், இந்தி, தெலுங்கு ஆகிய திரையுலகங்களில் புகழ்பெற்ற சோபிதா துலிபலா இணைந்திருக்கிறார். இந்தத் தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோபிதா அறிவித்திருக்கிறார்.
ராமன் ராகவ் 2.0, மூதோன், த பாடி ஆகிய திரைப்படங்களின் மூலம் புகழ்பெற்ற சோபிதாவுக்கு தென் இந்திய சினிமாவிலும் நல்ல வரவேற்பு இருந்தது. பெரும்பாலும் அனுராக் காஷ்யப்புடன் தொடர்புள்ள படங்களில் மட்டுமே சோபிதா தலைகாட்டுவார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இணைந்ததன் மூலம் தமிழ்த் திரையுலகிலும் சோபிதா வரவிருக்கிறார். இது, ஒருவேளை படத்தில் அனுராக் காஷ்யப்பும் இருக்கிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படி இருந்தால், மணிரத்னம் மேஜிக்கில் அனுராக் காஷ்யப்பின் நடிப்பு எப்படி இருக்கிறது என்பதையும் ரசிகர்களால் பார்க்கமுடியும்.
�,”