என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்- நடிகர் சாந்தனு

Published On:

| By Balaji

குடும்ப நண்பர்கள் என்று சொல்லி தன் பெயரை தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள் என நடிகர் சாந்தனு தெரிவித்துள்ளார்.

‘சக்கரக்கட்டி’ படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் நடிகர் சாந்தனு. அதன் பிறகு சில படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் விஜய்யுடன் அவர் இணைந்து நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் தான் அவரது கம்பேக் என அவர் தனது பேட்டிகளில் தெரிவித்திருந்தார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்த ‘தங்கம்’ கதையில் (நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ‘பாவக்கதைகள்’ ஆந்தாலஜி) அவருடைய கதாப்பாத்திரம் கவனிக்கப்பட்டது.

தற்போது ‘இராவண கோட்டம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லி தவறான எண்ணில் இருந்து சினிமாத்துறையை சேர்ந்த நண்பர்களை அழைத்து பேசுவதாகவும், தன் பெயரை தவறான முறையில் உபயோகிப்பதாகவும், அதனை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தனது சமூக வலைதள பக்கங்களில் விளக்கம் கொடுத்துள்ளார் சாந்தனு.

இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட நண்பர்கள் தன்னிடம் விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ள தயங்க வேண்டாம் என்று சொல்லி, தவறாக உபயோகித்து அழைப்பு வந்த எண்ணின் புகைப்படத்தையும் அந்த பதிவில் இணைத்துள்ளார் சாந்தனு.

**ஆதிரா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share