இன்று மூன்றாவது டி20 போட்டி: விராட் கோலிக்கு ஓய்வு!

entertainment

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 20) இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் நடக்கும் மூன்றாவது டி20 போட்டியில் இருந்து விராட்கோலிக்கு பிசிசிஐ ஓய்வு கொடுத்துள்ளது. இதையடுத்து அவர் தமது சொந்த ஊர் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 தொடருக்குப் பின்,இந்தியா – இலங்கை இடையே டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. முதல் போட்டி மொஹாலியில் அடுத்த மாதம் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டி கோலிக்கு 100ஆவது டெஸ்ட் போட்டியாகும்.
மேலும் டெஸ்ட் தொடரை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளிலும் புத்துணர்ச்சியுடன் பங்கேற்பதற்காக வசதியாக மூன்றாவது டி20 போட்டியில் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் முழங்கால் காயத்தில் இருந்து ரவீந்திர ஜடேஜா குணமடைந்து விட்டதால் மூன்றாவது டி20 போட்டியில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.