நடிகர் சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் செப்டம்பர் 24 அன்று ஓடிடியில் வெளியான படம் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும். மிதுன், ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியான இந்த படம் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் வெளியாகி இருந்தது.
இந்தப் படம் 2016-ல் வெளிவந்த மராத்தி திரைப்படம் ரங்கா படாங்கா படத்தின் கதையை அப்பட்டமாக தழுவி எடுக்கப்பட்டிருந்தது.
படம் வெளியாகி, விமர்சகர்கள் கதைத் திருட்டு விஷயத்தை எழுதிய பிறகே இந்த விஷயம் சூர்யாவின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனால் கடும் கோபத்துக்கு ஆளான சூர்யா, இயக்குனர் அரிசில் மூர்த்தியை அழைத்து எச்சரித்துள்ளார்.
அதோடு மராத்தி படத்தின் தயாரிப்பாளருக்கு காப்புரிமை படி கதைக்காக பெரும் தொகையும் கொடுத்துள்ளார்
இதுபோன்ற குற்றசாட்டுகள் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்கள் மீதே சுமத்தப்பட்ட போதெல்லாம் எனது சொந்த கற்பனை என்பார்கள்.
அல்லது அந்தப் படத்தின் பாதிப்பில் உருவான கதை என கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக பதில் சொல்லி தப்பித்துக்கொள்வார்கள். ஆனால் தனது நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான படம், ஏற்கனவே வந்த படத்தின் தழுவல் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட நடிகர் சூர்யா தானாக முன் வந்து நஷ்ட ஈடு கொடுத்திருக்கிறார்.
இந்திய சினிமாவில் எந்த மொழியிலும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் செய்யாத செயல் இது என்கின்றனர் தமிழ் சினிமா வட்டாரத்தில்.
**-இராமானுஜம்**
�,”