விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’: வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

Published On:

| By Balaji

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சசி இயக்கத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து 2016ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் ‘பிச்சைக்காரன்’. ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை புரிந்த இந்தத் திரைப்படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்தார்.

விஜய் ஆண்டனியின் திரைவாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்ற இந்தத் திரைப்படத்தில் சாட்னா டைட்டஸ் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் தீபா ராமானுஜம், பகவதி பெருமாள், முத்துராமன் உள்ளிட்டவர்களும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த நிலையில் ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான முயற்சியில் விஜய் ஆண்டனி தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

படத்துக்கான கதை மற்றும் திரைக்கதையை கொரோனா ஊடரங்கு காலத்தில் விஜய் ஆண்டனி எழுதி முடித்தார். இந்த நிலையில் இன்று(ஜூலை 24) விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு காலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

#pichaikkaran2 #Bitchagadu2 pic.twitter.com/hsaEdEURMO

— vijayantony (@vijayantony) July 24, 2020

இந்தப்படத்தை தேசிய விருது வென்ற ‘பாரம்’ படத்தின் இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசாமி இயக்குகிறார். தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் உருவாகவிருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share