துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், தமிழில் அவர் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்திருந்த இந்தத் திரைப்படத்தில், கெளதம் மேனன், ரக்ஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த நிலையில் தமிழில் அவர் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று(மார்ச் 12) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்குநராக அறிமுகமாகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘ஹேய் சினாமிகா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தில் காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர்.
The magic of new beginnings ! Starting the journey of #HeySinamika with some lovely ladies Aditi Rao Hydari, Kajal Aggarwal and under the guidance of my dearest Brinda master ! @jiostudios @dulQuer @aditiraohydari @MsKajalAggarwal @brindagopal @JioCinema @globalonestudio pic.twitter.com/YvWDH19Neo
— dulquer salmaan (@dulQuer) March 12, 2020
படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு , பூஜையுடன் இன்று துவங்கப்பட்ட நிலையில் அந்த நிகழ்வில் துல்கர் சல்மான், அதிதி ராவ், இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் பாக்யராஜ், சுகாசினி, குஷ்பு, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”