விக்ரமுடன் முதன்முதலாக இணையும் கார்த்திக் சுப்புராஜ்

entertainment

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், அஜய் ஞானமுத்துவின் கோப்ரா படங்களை தொடர்ந்து, விக்ரம் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் இயக்குநர் யார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

கடாரம் கொண்டான் படத்தை தொடர்ந்து, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் ஒப்பந்தமானார் விக்ரம். ரஷ்யாவில் நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு உலகெங்கும் பரவியுள்ள கொரோனாவின் தாக்கத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் இயல்பு நிலை திரும்பும் போது, படப்பிடிப்பை தொடர படக்குழு முடிவெடுத்துள்ளது. இதனிடையில், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில், ஆதித்ய கரிகாலனாக நடித்து வருகிறார் விக்ரம். இப்படங்களுக்கு பிறகு விக்ரம் நடிக்கவுள்ள படத்தின் இயக்குநர் யார் என்ற கேள்வி சமீப நாட்களாக உலா வருகிறது. ஏனெனில் விக்ரம் சினிமாவில் இருந்து விலகுகிறார் என சில நாட்கள் முன் கிளம்பிய வதந்தியால் அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து விக்ரம் தரப்பு இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் ‘சீயான் 60’ இயக்குநர் யார் என தங்களுக்குள் உரையாடலை நிகழ்த்தத் துவங்கினர்.

இந்நிலையில், விக்ரம் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. ‘சீயான் 60’- ஐ இயக்குவதற்கு கார்த்திக் சுப்புராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நடிகருக்கு நெருக்கமான நம்பகமான வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. கோப்ராவுக்குப் பிறகு லலித் குமார் மீண்டும் விக்ரம் படத்தை தயாரிக்க வாய்ப்புள்ளது. பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் பட்சத்தில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படும் என்றும், அதே நேரத்தில் பொன்னியின் செல்வனுடன் இணைந்து இப்படமும் படமாக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டு தேசிய விருது வென்றவர்களின்(பிதாமகன் – விக்ரம், ஜிகார்தண்டா – கார்த்திக் சுப்புராஜ்) இந்த புதிய கூட்டணி இணையவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தவுடன் நிச்சயமாக இது திரைப்பட ஆர்வலர்களை உற்சாகப்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை.

*நன்றி: DTNEXT*

**-முகேஷ் சுப்ரமணியம்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *