|தமிழ் சினிமா 2019: ஜனவரி பிப்ரவரி வசூல் ராஜா யார்?

entertainment

ஜனவரி மாதம் மட்டும் தமிழ் சினிமாவில் 8 படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. இதில் வியாபார ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கவனிக்கப்பட்ட படங்கள் விஸ்வாசம், பேட்ட, சார்லி சாப்ளின் ஆகிய மூன்று படங்கள் மட்டுமே. மற்ற ஐந்து படங்களும் பெயரளவில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் படங்களால் திரையரங்குகளில் குறிப்பிடத்தக்க அளவு வசூல் செய்ய முடியவில்லை.

ஒரு படத்தை தமிழகத்தில் குறைந்தபட்சம் 50 முதல் 100 திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்கு சுமார் 40 லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஒரு காட்சி, ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் இதுபோன்ற படங்கள் ஓட்டப்படுகிறது. சில படங்கள் திரையரங்குகளில் முதல் நாளே தூக்கப்படுவதும் உண்டு. இதற்காக 40 லட்ச ரூபாய் ஏன் செலவு செய்ய வேண்டும் என்கிற சிந்தனை தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுவதில்லை.

ரஜினிகாந்த் நடித்த படம் ரிலீஸ் செய்யப்படுகிற நாட்களில் வேறு எந்த நடிகருடைய படமும் அதற்கு போட்டியாக வெளியிடப்படுவது இல்லை. இந்த வருடம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 10ஆம் தேதி ரஜினி நடித்த பேட்ட, அஜித் நடிப்பில் விஸ்வாசம், பிரபுதேவா நடிப்பில் சார்லி சாப்ளின் 2, தேவகோட்டை காதல், மாணிக், சிகை, குத்தூசி, சிம்பா ஆகிய படங்கள் வெளியானது. இவற்றில் வசூல் ரீதியாக விஸ்வாசம் படம் முதலிடத்தையும், முதலில் தடுமாறினாலும் அடுத்தடுத்த நாட்களில் ரஜினி நடித்த பேட்ட வசூல் ஓஹோ என்று இல்லை என்றாலும் சுமாரான வசூலை தக்க வைத்துக் கொண்டது. நடன இயக்குநர்-ஹீரோ-இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்ட பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் முதல் வாரத்திலேயே முடங்கிப் போனது. ஜனவரி மாதம் முழுமையும் பெரும்பான்மையான திரைகளில் விஸ்வாசம், பேட்ட இரு படங்களும் ஓடியது. தமிழகத்தில் விஸ்வாசம் 140 கோடி ரூபாயும், பேட்ட சுமார் 100 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்தன.

**பிப்ரவரி மாதம் மட்டும் தமிழ் சினிமாவில் 21 படங்கள் ரிலீஸாகின**

பேய் எல்லாம் பாவம், பேரன்பு, சகா, சர்வம் தாள மயம், வந்தா ராஜாவாதான் வருவேன், தில்லுக்கு துட்டு, பொதுநலன் கருதி, அவதார வேட்டை, நேத்ரா, உறங்காப்புலி, வாண்டு, களவு, தேவ், சித்திரம் பேசுதடி-2, கோக்கு மாக்கு, காதல் மட்டும் வேணா, அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய், கண்ணே கலைமானே, எல்.கே.ஜி, பெட்டிகடை, டூலெட் என 21 படங்கள் ரீலீஸ் ஆனது பிப்ரவரியில்.

மம்முட்டி நடித்த பேரன்பு, சிலம்பரசன் நடித்த வந்தா ராஜாவாத்தான் வருவேன், கார்த்தி நடிப்பில் வெளியான தேவ், உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணே கலைமானே ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை. சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 2, R.J.பாலாஜி நடித்த LKG ஆகிய இரு படங்களும் பிப்ரவரியில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களாகும். தில்லுக்கு துட்டு 18 கோடி, LKG 11 கோடி ரூபாய் அளவுக்கு மொத்த வசூல் செய்தன. பிற படங்கள் படங்கள் அனைத்தும் வந்த வேகத்தில் தியேட்டரை விட்டு திரும்பிய படங்களாகிப் போனது.

இரு மாதங்களில் அனைத்து தரப்புக்கும் லாபகரமான படங்கள் என விஸ்வாசம் தில்லுக்கு துட்டு, LKG ஆகிய மூன்று படங்கள் மட்டுமே. சூப்பர் ஸ்டார் பட்டத்துக்குரிய ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.

ஜனவரி- பிப்ரவரி மாதங்களில் வெளியான 30 படங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை சுமார் 400 கோடி ரூபாய் இதில் ரஜினி, அஜித், சிலம்பரசன், கார்த்தி, பிரபுதேவா, மம்முட்டி இவர்களது சம்பளம் மட்டும் சுமார் 120 கோடி ரூபாய். மொத்த முதலீட்டில் 40% நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

**நாளை: மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வெளியான திரைப்படங்கள் வசூல் நிலவரம்.**

-இராமானுஜம்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *