மலர் கேரக்டருக்கு முதல் சாய்ஸ் இவரா?: பிரேமம் இயக்குநர்

entertainment

சினிமா பிரபலங்கள் பொதுவாக சமூகவலைதளங்களில் வந்து ரசிகர்களின் கேள்விக்குப் பதில் சொல்வது வழக்கமான ஒன்று. ரசிகர்களோடு தொடர்ச்சியாக சமூக வலைதளம் மூலமாகப் பேசிக்கொண்டிருக்கும் சினிமா பிரபலங்களில் ஒருவர் அல்போன்ஸ் புத்திரன். நிவின்பாலி நடித்த நேரம் படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் இயக்கிய இரண்டாவது படம் ‘பிரேமம்’. மலையாளம் மட்டுமின்றி, தமிழ் சினிமா ரசிகர்களும் கொண்டாடிய படம்.

பிரேமம் வெளியான நேரத்தில் சென்னையில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. பிரேமம் கொண்டாடப்பட முக்கிய காரணம் மலர் டீச்சர் கேரக்டர் தான். அந்த ரோலில் சாய் பல்லவி நடித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் முடிந்துவிட்டது.

இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் அல்போன்ஸ் புத்திரன். அப்போது, ரஜினியுடன் எப்போது படம் பண்ணுவீர்கள் என்ற ரசிகர்களின் கேள்விக்கு இவரின் பதில் பரபரப்பாக பேசப்பட்டது. தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு ஃபிலிம்மேக்கிங் பற்றி எது வேண்டுமானாலும் கேளுங்கள். எனக்குத் தெரிந்ததை சொல்லித் தருகிறேன். தெரியவில்லையென்றால் தெரிந்து கொண்டு சொல்கிறேன். ஸ்டார்ட்ஸ்.. என முகநூலில் பதிவிட்டிருந்தார். அப்படி கேட்கப்பட்ட கேள்விக்கு ஆச்சர்யமூட்டும் தகவலை சொன்னார் அல்போன்ஸ்.

“உங்க படங்களில் தமிழ்மொழி மீதான ஆர்வம் தெரிகிறது. குறிப்பாக மலர் கதாபாத்திரம், படத்தில் நீங்க பயன்படுத்தும் தமிழ் பாடல்கள். இவையெல்லாம் நீங்கள் சென்னையில் இருந்ததால் வந்த தாக்கமா? மலர் கதாபாத்திரத்திற்கு பதிலா, ஒரு மலையாளம் பேசும் பெண்ணை மாற்றுவது பற்றிய உங்கள் எண்ணம் என்ன? என்று ரசிகர்கள் கேள்வி கேட்டிருந்தனர்.

அதற்கு, “ நான் முதலில் பிரேமம் கதை எழுதும் போது அசின், மலர் ரோலில் நடிக்க வேண்டுமென விரும்பினேன். அந்தக் கதாபாத்திரம் கொச்சியிலிருந்து வருவதாக கதை எழுதியிருந்தேன். (மலர் கொடைக்கானலில் இருந்து கேரளா சென்றிருப்பார்) ஆனால், என்னால் அசினைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. நிவின் கூட முயற்சி செய்தார். பிறகு அந்த யோசனையை கைவிட்டு விட்டு தமிழ் கதாபாத்திரத்தைக் கொண்டுவந்தேன். இது எல்லாம் ஸ்க்ரிப்ட் ஸ்டேஜில் நடந்தது. நான் ஊட்டியில் படித்தேன். சினிமா படிப்புக்காக சென்னையில் இருந்தேன். இதுதான், என்னுடைய சினிமாவில் தமிழ் கனெக்ட் ஆக இருப்பதற்கு காரணம்” என்று பதில் கூறியிருந்தார் அல்போன்ஸ் புத்திரன்.

**- ஆதினி **

.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *