xகுட்டி ஸ்டோரி: கீர்த்தியின் வயலின் வாழ்த்து!

entertainment

நடிகர் விஜய் தனது 46ஆவது பிறந்தநாளை நேற்று(ஜூன் 22) கொண்டாடினார். வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள், ஃபேஸ்புக் போஸ்ட்கள், சிறப்பு வீடியோ பதிவுகள் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விஜய்க்கு சிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

திரையுலக நட்சத்திரங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷின் சிறப்பு வாழ்த்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ‘பைரவா’, ‘சர்கார்’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்தவருமான நடிகை கீர்த்தி சுரேஷ் தனது வயலின் இசையின் மூலமாக விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவரவிருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ‘குட்டி ஸ்டோரி’ பாடலை வயலினில் இசைத்து விஜய்க்கு அவர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவைத் தனது சமூகவலைதளப்பக்கங்களில் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ், “Life is very short Nanba, always be happy” என்று பாடல் வரிகளைக் குறிப்பிட்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

@jrvarma

Keerthi chechis new work done by us❤️ Tribute to ##thalapathy ##keerthysuresh ##actor ##musician @vishnurvarma6 @sajankamal2

♬ original sound – jrvarma

இந்த வாழ்த்து வீடியோ விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்த ‘பெண்குயின்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0