பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு மீது சினிமாவில் நடிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு, தற்போது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இந்த படத்தை சுராஜ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புக்காக வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் சில நாட்களுக்கு முன்பு லண்டன் சென்றனர். தற்போது, அங்கு வேலைகளை முடித்து விட்டு வடிவேலு டிசம்பர் 24 அன்று சென்னை திரும்பினார்.
அப்போது மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வடிவேலுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்குத் தேவையான சிகிச்சைகளை டாக்டர்கள் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட இயக்குநர் சுராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடிவேலு சிகிச்சை பெற்று வரும் அதே மருத்துவமனையில் சுராஜ் அனுமதிக்கப்பட்டுள்ளார். தானும் வடிவேலுவும் நலமாக இருப்பதாக சுராஜ் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அமெரிக்கா சென்று திரும்பிய நடிகர் கமலஹாசன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-இராமானுஜம்**
�,