பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் அஜித்

Published On:

| By Balaji

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள ‛வலிமை’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்த கையோடு, தமது நீண்ட நாள் கனவான உலகம் முழுவதும் பைக்கில் சுற்றும் பயணத்தை அஜித் மேற்கொண்டு வருகிறார்.

இதுவரை 18000 கி.மீ பயணம் செய்துள்ள அஜீத்குமார் பயணத்தின் ஒரு பகுதியாக வாகா எல்லையில், ராணுவ வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த புகைப்படத்தை பகிர்ந்த வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், அஜித்தை புகழ்ந்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்தநிலையில் அஜித் மேற்கொள்ளும் உலக பயணத்தின் மற்றுமொரு புகைப்படம் வெளியாகியுள்ளது. நேபாள தலைநகர் காத்மண்டு சென்று திரும்பும் வழியில் உள்ள தார் பாலைவனத்தில் அஜித் ஓய்வெடுக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. பைக்கில் சாய்ந்தவாறு தண்ணீர் அருந்தும் அஜித்தின் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share