நடிகை மீனாவின் கணவர் மரணம்!

entertainment

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக உயிரிழந்துள்ளார்.
தமிழில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக பல படங்கள் நடித்திருந்தாலும் ராஜ்கிரணின் ‘என் ராசாவின் மனசிலே’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பின்பு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார்.
இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரான வித்யாசாகரும் 2009இல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். இந்த வருட ஆரம்பத்தில் மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதில் இருந்து மீண்டனர். ஆனால், கொரோனா பாதிப்பு மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட அலர்ஜி காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்திருக்கிறார் மீனாவின் கணவர் வித்யாசாகர்.
ஏற்கனவே அவருக்கு சுவாசம் மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் இருந்திருக்க கோவிட் அவர் நிலையை இன்னும் மோசமாக்கி இருக்கிறது. நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய அவரது குடும்பம் திட்டமிட்டிருந்தது. ஆனால், மூளைச்சாவு அடைந்தவரின் நுரையீரல் கிடைக்க தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று (ஜூன் 28) காலமானார்.
**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *