மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 24 ஜுன் 2022

உங்களுக்குப் பிடித்தால்தான் எங்களுக்கு வேலையே: ஷிவாங்கி

உங்களுக்குப் பிடித்தால்தான் எங்களுக்கு வேலையே: ஷிவாங்கி

பிரபலங்கள் என்றாலே அவர்களுக்கு சமூக வலைதளங்களில் புகழ் வெளிச்சம் இருப்பதுபோல எதிர்மறை விமர்சனங்களும் கருத்துகளும் வருவது வழக்கம். அந்த வகையில் தனக்கு வரும் எதிர்மறை விமர்சனங்களையும் மிகவும் பொறுமையாக கையாண்டு வருகிறார் ஷிவாங்கி.

சமீபத்தில்கூட அவர் கலந்துகொள்ளாத 'குக் வித் கோமாளி' எபிசோட் பற்றி சமூக வலைதளத்தில ஒருவர் 'ஷிவாங்கி இல்லாதது மிகவும் சந்தோஷம்' என்ற ரீதியிலான பதிவு ஒன்றில் பகிர்ந்திருக்க, அதற்கு ஷிவாங்கி, 'இல்லாத என்னை பற்றி பேசுவதைவிட இருக்கும் கோமாளிகள் பற்றியும், அவர்களது திறமையையும் பாராட்டலாம்' என்று பதிலளித்திருந்தார்.

இப்போது இன்னொரு ரசிகர் ஒருவர், 'நீங்கள் எல்லாம் பிரபலங்கள்... உங்களுக்கு மிடில் கிளாஸான எங்களைப் போல, இன்டர்வியூ அட்டென்ட் செய்து வேலை கிடைக்குமா, கிடைக்காதா என்ற பதற்றம் நிறைந்த வாழ்க்கை இல்லை. சூப்பர்! ஆனால், எங்களைப் போன்ற மிடில் கிளாஸ் ஆட்கள்தான் எல்லா சூழ்நிலைகளுக்கும் பதற்றப்பட வேண்டியிருக்கிறது' என்று கமென்ட் செய்திருந்தார்.

இதற்கு ஷிவாங்கி வழக்கம் போல தன்னுடைய முதிர்ச்சியான அணுகுமுறையால் பதிலளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, 'உங்களுடைய சூழ்நிலை எனக்குப் புரிகிறது. ஆனால், உங்களைப் போலவே எங்களுக்கும் நாங்கள் செய்கிற வேலை உங்களுக்குப் பிடிக்குமா, பிடிக்காதா என்ற பதற்றம் இருந்து கொண்டேதான் இருக்கும். உங்களுக்குப் பிடிக்கும்படியான வேலைகள் செய்தால் மட்டுமே நாங்கள் தொடர்ந்து இங்கு நிலைத்து இருக்க முடியும்.

அதனால் யாருடைய வாழ்க்கையும் இங்கு எளிது கிடையாது. பணக்காரரோ, மிடில் கிளாஸோ, ஏழையோ... யாராக இருந்தாலும் சரி, போராட்டம் என்பது அவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் இருக்கும். அதுதான் எங்களுக்கும்' என பதிலளித்துள்ளார் ஷிவாங்கி.

ஆதிரா

சினிமாவில் அறிமுகமாகும் செந்தில் மகன்!

2 நிமிட வாசிப்பு

சினிமாவில் அறிமுகமாகும் செந்தில் மகன்!

மாதவன் பேச்சு சர்ச்சையும் மயில்சாமி அண்ணாதுரை விளக்கமும்

9 நிமிட வாசிப்பு

மாதவன் பேச்சு சர்ச்சையும் மயில்சாமி அண்ணாதுரை விளக்கமும்

திரௌபதி முர்மு: சர்ச்சை கருத்துக்கு ராம்கோபால் வர்மா விளக்கம்! ...

3 நிமிட வாசிப்பு

திரௌபதி முர்மு: சர்ச்சை கருத்துக்கு ராம்கோபால் வர்மா விளக்கம்!

வெள்ளி 24 ஜுன் 2022