மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 24 ஜுன் 2022

தோல்வி படத்தை கொடுங்கள் பேயை பார்க்கலாம்: எஸ்.ஜே.சூர்யா

தோல்வி படத்தை கொடுங்கள் பேயை பார்க்கலாம்: எஸ்.ஜே.சூர்யா

ஆஹா ஓடிடி’ தளத்தின் அடுத்த படைப்பாக ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர் வெளியாகிறது.

இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இத்தொடர் ஒரு புதுமையான ஹாரர் தொடராக உருவாகியுள்ளது. ஆர்கா மீடியா ஒர்க்ஸ் இத்தொடரை தயாரித்துள்ளது.

இத்தொடர் சம்பந்தமான அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது

அதில் எழுத்தாளர் சௌமியா பேசுகையில், “இந்த தொடருக்கு இப்போது இருக்கும் இவ்வளவு பெரிய வரவேற்பு, நாங்கள் இந்த கதையை உருவாக்கும்போது இல்லை. முதலில் எந்த நோக்கமும் இல்லாமல்தான் கதையை உருவாக்க ஆரம்பித்தோம், பின்னர் தீவிரமான கதையாக இது மாற ஆரம்பித்தது. பின்னர் தயாரிப்பாளரை சந்தித்து கதையை கூறியபோது, அவருக்கும் பிடித்திருந்தது. நடிகர்கள் உள்ளே வந்தார்கள். எல்லாம் வேகமாக நடப்பதாய் இருந்தது. தொடரும் சிறப்பாக வந்துள்ளது. ஒரு நல்ல படைப்பாக தொடர் உருவாகியுள்ளது” என்றார்.

இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி பேசும்போது, “டிரெய்லரை பார்த்து ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும். நான் ஆஹாவில் பணிபுரிந்துள்ளேன். ஆஹா சிறந்த கதைகளை எப்போதும் எடுக்க விரும்புவார்கள். ஆஹா தமிழில் சிறந்த பணிகளை செய்து வருகிறார்கள், தெலுங்கைவிட பெரிய வெற்றியை ஆஹா தமிழ் பெறும் என நான் நம்புகிறேன்.

இந்த தொடர் உருவாக காரணமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் ஆர்கா மீடியா ஒர்க்ஸ்க்கு நன்றி. இந்த தொடரை இரு மொழிகளில் உருவாக்கினோம். அதற்கு நிறைய உழைப்பு தேவைப்பட்டது. படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஒட்டு மொத்த படக் குழுவிற்கும் இந்த இடத்தில் நன்றியை கூறி கொள்கிறேன். அல்லு அரவிந்த் அவர்களுக்கு நன்றி, என் வாழ்கையில் முக்கியமான நபர் அவர். தொடர் சிறப்பாக வந்துள்ளது. உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் என நான் நம்புகிறேன்” என்றார்.

நடிகை ரெஜினா கஸண்ட்ர பேசுகையில், “இந்த படைப்பில் நான் இருப்பது மகிழ்ச்சி. ஆன்யா’ஸ் டுடோரியல் போன்ற சைக்காலஜிகள், திரில்லர் கதைகள் வருவது சந்தோஷம்தான். நான் நடித்த மது கதாபாத்திரத்தை கண்டிப்பாக தவற விடக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன்.

நான் அறிமுகமானபோது திரைத்துறையில் பெண்கள் மிக குறைவாக இருந்தார்கள். இன்று இந்த மேடையில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் இருப்பது மகிழ்ச்சி. பல பெண்கள் இணைந்து இந்த தொடர் தயாரிப்பில் பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் விஜய் சக்ரவர்த்திதான் இந்த தொடரின் முக்கியமான தூண், அவரது பணிகள் கதாபாத்திரத்தின் குணங்களை பிரதிபலிக்கும்படி இருக்கும். இந்த தொடர் உங்கள் அனைவரையும் கவரும்” என்றார்.

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, “பெரிய ஓடிடி நிறுவனங்களுடன் போட்டியிடும் ஆஹாவிற்கு வாழ்த்துகள். இந்த தொடரை இயக்கிய பல்லவி கங்கி ரெட்டிக்கு, வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன். படம் இயக்குவதே இந்தக் காலத்தில் பெரிய சவாலான விஷயம். இது மாதிரியான தொடரை இயக்குவது அதைவிட பெரிய விஷயம். ஒளிப்பதிவாளர் விஜய் சக்ரவர்த்தி சிறப்பான விஷுவல்களை கொடுக்க கூடியவர். சிறு வயதில் பேயை பார்க்க ஆசைப்பட்டு பல விசயங்கள் செய்துள்ளேன். இந்த தொடரில் பேயை சுவாரஸ்யமாக காட்டியிருப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.

நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், “அல்லு அரவிந்த்தின் வேகம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய குழுவும், திறமைமிக்க ஆட்கள் நிறைந்த குழுவாக இருக்கிறார்கள். முருகதாஸ் சார் டீமில் உள்ள எனர்ஜிடிக்கான நபர் பல்லவி. அவர் இயக்கிய தொடரின் விழாவிற்கு நான் வந்தது எனக்கு பெருமையான விஷயம்.

ரெஜினா எப்போதும் தன்னுடைய அழகையும், திறமையையும் தொடர்ந்து கச்சிதமாக தக்கவைத்து கொண்டுள்ளார். நிவேதிதா, ரெஜினா கஸண்ட்ரா இருவரும் இந்த தொடருக்கு பொருத்தமான தேர்வு. இருவரது முக அமைப்பும் சகோதரிகள் போல் அப்படியே இருக்கிறது.

விஜய் ஆண்டனி “பேயை பார்க்க ஆசை…” என்றார். ஒரு தோல்வி படத்தைக் கொடுத்துப் பாருங்க.. எல்லா பேயையும் பார்த்து விடலாம். ஒரு தோல்வி எல்லாவற்றையும் கற்றுத் தரும். ‘பாகுபலி’ போன்ற படைப்பை எடுத்த ஒரு நிறுவனம், தமிழில் ஒரு சீரிஸ் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. பெரும் திறமை வாய்ந்த நபர்கள் இணைந்து இந்த தொடரை உருவாக்கி இருப்பது மகிழ்ச்சி. இந்த தொடர் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்.” என்றார்.

நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி பேசும்போது, “ஆஹா தமிழுக்கு எனது வாழ்த்துகள், அவர்கள் மூலமாக புது திறமையாளர்களும், கதைகளும் உருவாவது மகிழ்ச்சி. அல்லு அரவிந்த் ஓடிடியை இவ்வளவு துரிதமாக ஆரம்பித்து, அதில் வெற்றி கண்டுள்ளது மகிழ்ச்சி” என்றார்.

-இராமானுஜம்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

வெள்ளி 24 ஜுன் 2022