மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 24 ஜுன் 2022

பார்வையற்றவர்களுக்காக மாயோன் சிறப்புக்காட்சி!

பார்வையற்றவர்களுக்காக மாயோன் சிறப்புக்காட்சி!

இன்று வெளியாக உள்ள மாயோன் திரைப்படத்தை பார்க்க பார்வையற்றவர்களுக்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டபுள் மீனிங் புரொடக்க்ஷன் நிறுவனத்தின் சார்பில் அருண்மொழி மாணிக்கம் மாயோன் படத்தை தயாரித்து திரைக்கதை அமைத்துள்ளார். என் கிஷோர் என்பவர் படத்தை இயக்கியுள்ளார். சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கே எஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடிப்பில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.

ஆன்மீகத்தையும் அறிவியலையும் மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டீஸர், ட்ரைலர் ஆகியவை ஆடியோ டிஸ்கிரிப்ஷனுடன் பார்வையற்றவர்களுக்காக

வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்றது.

இந்த நிலையில் இன்று வெளியாக உள்ள இந்த படத்திற்காக சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் காலை 8 மணிக்கு பார்வையாளர்களுக்காக ஆடியோ டிஸ்கிரிப்ஷனுடன் படத்தை திரையிட படக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதன் மூலம் பார்வையற்றவர்களுக்கும் மாயோன் படத்தை பார்த்த முழு திருப்தி கிடைக்கும். மேலும் இந்த படத்திற்காக திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக பெருமாளுக்கு மிகப்பெரிய பேனர் சென்னை ரோகினி திரையரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக சைகோ திரைப்படம்பார்வையற்றவர்களுக்காக பிரத்யேக பாணியில் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-இராமானுஜம்

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

வெள்ளி 24 ஜுன் 2022