வெங்கட்பிரபு படத்திற்காக கைக்கோர்க்கும் இளையராஜா, யுவன்

இயக்குநர் வெங்கட்பிரபு, நாக சைதன்யாவை இயக்கும் திரைப்படத்தில் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் சேர்ந்து இசை அமைக்கின்றனர்.
'மாநாடு', 'மன்மதலீலை' படத்திற்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு நாக சைதன்யாவுடன் தன்னுடைய அடுத்த படத்தை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். இது நாக சைதன்யாவின் 22வது படமாகும். தமிழ் - தெலுங்கு என பைலிங்குவலாக இந்தப் படம் உருவாகிறது.
நேரடி தமிழ் படம் என்பதால் நாக சைதன்யாவுக்கு நேரடியாக தமிழில் அறிமுகமாகும் முதல் படமும் கூட. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இந்த படத்தில் இணைந்து இசையமைக்கிறார்கள். இதனை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாக சைதன்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி இருவரும் இதற்கு முன்பு தெலுங்கில் ஒரு படம் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
இதற்கு பிறகு நாக சைதன்யாவுடன் கீர்த்தி ஷெட்டி மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளார். இதுமட்டுமல்லாது மேலும் இரண்டு படங்களும் இவரது கைவசம் உள்ளன. இன்னொரு பக்கம் நாகசைதன்யா பாலிவுட்டில் அமீர்கானுடன் ' லால் சிங் சதா' மற்றும் தெலுங்கில் 'தேங்க்யூ' உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். வெங்கட் பிரபுவுடன், நாக சைதன்யா இணைந்து உள்ள இந்த திரைப்படம் அடுத்த வருடம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதிரா