மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 ஜுன் 2022

நடிகர் சிம்புவின் 'பத்துதல' ரிலீஸ் எப்போது?

நடிகர் சிம்புவின் 'பத்துதல' ரிலீஸ் எப்போது?

'மிஸ்டர் லோக்கல்' படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இடையில் உள்ள பிரச்சினை குறித்து ஞானவேல்ராஜா மனம் திறந்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, "'மிஸ்டர் லோக்கல்' படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு என்று ஒரு சம்பளம் பேசி இருந்தோம். அந்த படத்திற்கு பிறகு நான் உடனடியாக ஒரு பெரிய படம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் அப்போது அதை தொடங்க முடியவில்லை. கடும் நெருக்கடியை சந்திக்க நேரிட்டது. அதனால் நான் சிவகார்த்திகேயனுக்கு கொடுத்த உறுதியை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

அவரும் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்து வழக்கு தொடுத்துவிட்டார். இப்படி வழக்கு தொடுத்து விட்டாரே என்று எனக்கு ஆரம்பத்தில் கோபம் இருந்தது. ஆனால், அவர் தரப்பிலும் நியாயம் இருக்கிறது என்று நான் அமைதியாகிவிட்டேன். இப்பொழுது வரை நான் சிவகார்த்திகேயனை தொடர்பு கொள்ள முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் அது முடியவில்லை. இனிவரும் காலத்தில் அவர் விருப்பப்பட்டு என்னுடைய தயாரிப்பில் நடிக்க விரும்பினால் அவருடன் இணைந்து பணிபுரிய தயாராக உள்ளேன். இப்பொழுதுதான் விக்ரமுடன் ஒரு படம் என பெரிய படங்கள் மீண்டும் ஆரம்பித்து இருக்கிறேன். அதனால் சிவகார்த்திகேயனுக்கு ஒப்படைத்த தொகை போக மீதமுள்ள தொகையை இப்பொழுது கொடுத்துக் கொண்டிருக்கிறோம்" என்று ஞானவேல்ராஜா பேசியிருக்கிறார்.

இது மட்டும் இல்லாது நடிகர் சிம்புவின் 'பத்துதல' படம் பற்றியும் பேசியிருக்கிறார். "இந்த கதையின் ரீமேக் உரிமையை நாங்கள் பெற்ற பின்பு, படத்தை இயக்க இயக்குநர் கிருஷ்ணாவை அணுகினோம். இந்த படத்தின் கதைக்கு நடிகர் அஜித், விஜய் சேதுபதி, சிம்பு என மூவரும் மிகச் சரியாக இருப்பார்கள். சிம்புவிடம் சொன்ன போது அவருக்கு கதை பிடித்து விட்டதால் அவரை இந்த படத்திற்குள் கொண்டு வந்தோம். படத்தின் வேலைகள் முடிந்து விட்டது. இந்த வருடம் டிசம்பரில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி படத்தை வெளியிட முடிவு செய்து இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

ஆதிரா

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

படத்தின் வெற்றி என்பது வசூல் அடிப்படையில் இல்லை – ஆர்.ஜே.பாலாஜி ...

3 நிமிட வாசிப்பு

படத்தின் வெற்றி என்பது வசூல் அடிப்படையில் இல்லை – ஆர்.ஜே.பாலாஜி

உங்களுக்குப் பிடித்தால்தான் எங்களுக்கு வேலையே: ஷிவாங்கி

3 நிமிட வாசிப்பு

உங்களுக்குப் பிடித்தால்தான் எங்களுக்கு வேலையே: ஷிவாங்கி

புதன் 22 ஜுன் 2022