மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 ஜுன் 2022

விஜய்க்கு குட்டி ஸ்டோரி சொல்லி வாழ்த்து!

விஜய்க்கு குட்டி ஸ்டோரி சொல்லி வாழ்த்து!

தனது பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரியை அனிமேஷன் வடிவில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது மாஸ்டர் படத்தின் நிர்வாக தயாரிப்பு நிறுவனம்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். அவர் தனது 48-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு அவரது ரசிகர்கள், திரை பிரபலங்கள், தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அவரது நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் முதல் பார்வை நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக தனது திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் குட்டிக் கதையை நடிகர் விஜய் சொல்வது வழக்கம். அந்த வகையில் மாஸ்டர் திரைப்பட இசை வெளியீட்டின் போது நதியை உதாரணமாக வைத்து ஒரு குட்டிக் கதையை சொல்லியிருந்தார். அதை அனிமேஷன் வடிவில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது அந்தப்படத்தின் நிர்வாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ.

‘நீ நதி போல ஓடிக்கொண்டு இரு’ என்ற பெயரில் இந்த அனிமேஷன் கதை வெளியிடப்பட்டுள்ளது. 1.27 நிமிடங்கள் இந்த கதை அனிமேஷன் வடிவில் நதியாக பாய்கிறது. இறுதியில் விஜயின் ஆட்டோகிராஃப்புடன் அந்த கதை நிறைவடைகிறது. பின்னர் தயாரிப்பு நிறுவனம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கிறது. தனித்துவமான வகையில் வாழ்த்து தெரிவித்துள்ளது அந்த நிறுவனம் வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை இந்த நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

-இராமானுஜம்

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

புதன் 22 ஜுன் 2022