மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 ஜுன் 2022

வெளிநாடுகளில் புஷ்பா படப்பிடிப்பு!

வெளிநாடுகளில் புஷ்பா படப்பிடிப்பு!

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து பான் இந்தியா திரைப்படமாக வெளியானது 'புஷ்பா'.

ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்த இந்தப் படத்தில் பஹத் பாசில், கன்னட நடிகர் தனஞ்ஜெயா, சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ், மைம் கோபி, பிரம்மாஜி உட்பட பலர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில், 'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியிருந்தார். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் படத்தின் பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்தது

தெலுங்கு தவிர, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியான இந்தப் படம் எல்லா மாநிலங்களிலும் பகுதியிலும் வரவேற்பைப் பெற்று வசூலை குவித்தது. இந்த நிலையில், 'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகம் வெளிநாடுகளைப் பின்னணியாக கொண்டு தயாரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செம்மரக் கடத்தல் தாதாவாக மாறும் புஷ்பா, வெளிநாடுகளில் தன் ஆதிக்கத்தை எப்படி செயல்படுத்துகிறார் என்பதுபோல இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக சீனா, ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும். 'புஷ்பா 2' படத்தில் ராஷ்மிகா தவிர இன்னொரு நாயகியாக இந்தி நடிகை நடிக்க இருக்கிறார் என்றும் புஷ்பா முதல் பாகத்தில் சமந்தா ஆடிய நடனம் போன்று இரண்டாம் பாகத்தில் இந்தி நடிகை ஒருவர் ஒரு பாடலுக்கு ஆட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்திய சினிமாவில் இரண்டாம் பாகம் படம் தயாரிப்பது சமீப வருடங்களாக அதிகரித்து வருகிற நிலையில் புஷ்பா படம் தொடங்குகிறபோதே இரண்டு பாகங்கள் என தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இராமானுஜம்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

புதன் 22 ஜுன் 2022