மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 ஜுன் 2022

ராக் வித் ராஜா: தனுஷுக்குக் கிடைத்த பாராட்டு!

ராக் வித் ராஜா: தனுஷுக்குக் கிடைத்த பாராட்டு!

இசையமைப்பாளர் இளையராஜா சமீப காலமாக சமூக வலைதளங்களில் தனது கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்.

ட்விட்டர் தளத்தில் தனது இசை ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி வருகிறார் அப்படி ஒரு ரசிகரின் கேள்விக்கு ஏதாவது ஒரு சம்பவம் உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்தால், அப்போது என் பாடல் உங்களுக்கு ஞாபகம் வரும் அல்லது ஏதாவது ஒரு பாட்டு ஞாபகம் வந்தால் உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவம் அந்தப் பாடலுடன் கனெக்ட் ஆகும் என்று இளையராஜா பதில் கூறியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ரசிகர் ஒருவர், ''கண்ணே கலைமானே'' பாடலை கண்களை மூடி கேட்கும்போதும், 'காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்' என்ற வரிகளை கேட்கும் போதும் என்னை அறியாமலேயே கண்ணீர் வந்துவிடுகிறது. அதற்காகத்தான் இளையராஜாவை இசையின் கடவுள் என்று கூறுகிறார்கள் எனத் தெரிவித்திருந்தார்.

ரசிகரின் இந்த ட்விட்டுக்கு பதிலளித்துள்ள இளையராஜா, "அந்தப் பாடலை நான் வெகு சீக்கிரமாகவே கம்போஸ் செய்து முடித்துவிட்டேன். அதன் இயற்கையான ஃப்லோ நேரடியாக இதயத்திற்குள் நுழையும் தன்மை வாய்ந்தது. அதனால் மக்கள் அந்தப் பாடல்களை கேட்கும்போது கண்ணீர் வந்துவிடுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு ரசிகர் ராக் வித் ராஜா நிகழ்ச்சியில் தனுஷ் பாடிய பாடல் தனியாக வெளியிட வேண்டும் என கேள்வி எழுப்பியிருந்தார்.

அவருக்கு பதிலளித்த இளையராஜா, "ஒருவர் இசையமைத்து உங்கள் மனதில் அந்தப் பாடல் நிற்கிறது என்றால் அது இசையமைத்தவரின் திறமை. ஓர் இசை உங்கள் மனதை தொடுகிறது என்றால் அதுதான் உயர்ந்த கலை படைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம். உங்களின் இதயத்தை தொட்டதற்காக தனுஷைப் பாராட்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

-அம்பலவாணன்

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

2 நிமிட வாசிப்பு

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

புதன் 22 ஜுன் 2022