மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 20 ஜுன் 2022

த்ரில்லர் பாணியில் பருந்தாகுது ஊர்க் குருவி!

த்ரில்லர் பாணியில் பருந்தாகுது ஊர்க் குருவி!

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் லைட்ஸ் ஆன் மீடியா தனது முதல் படைப்பாக தயாரித்துள்ள திரைப்படம் ‘பருந்தாகுது ஊர்க் குருவி’.

தயாரிப்பாளர்கள் சுரேஷ் இஏவி, சுந்தர கிருஷ்ணா.பி, வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா இருவரும் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மும்பை மாடல் காயத்திரி ஐயர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். ‘ராட்சசன்’ வினோத் சாகர், அருள் டி சங்கர், கோடங்கி வடிவேல், இ.ராம்தாஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய கோ.தனபாலன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது…’ எனும் கருத்தில், இளைஞர்கள் குழுவின் புது முயற்சியில், த்ரில் பயணமாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

பல புதிர்கள் நிறைந்த காட்டுக்குள் இருவர் மாட்டிக் கொள்ளும் சிக்கலான சூழலில், ஒருவர், மற்றொருவரை எப்படி காப்பாற்றுகிறார். அவர்கள் எப்படி உயிர் பிழைக்கிறார்கள் என்பதை ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில், சர்வைவல் த்ரில்லர் பாணியில் சொல்கிறது இப்படம்.

கூடலூர் மண் வயல் கிராமம் அருகே மனிதர்கள் நடமாடாத இருள் சூழ்ந்த காட்டுப் பகுதியில் படக் குழு தனது கடும் உழைப்பில் படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளது. இதுவரை திரையில் கண்டிராத புது அனுபவமாக இத்திரைப்படம் இருக்கும். இந்த ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

-இராமானுஜம்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

திங்கள் 20 ஜுன் 2022