மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 20 ஜுன் 2022

விஜய் பிறந்தநாள்: படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

விஜய் பிறந்தநாள்: படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

விஜய் நடித்து வரும் 'விஜய் 66' படத்தின் முதல் பார்வை ஜூன் 21ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைப்பிடப்படாத படம் 'விஜய் 66. தெலுங்குபட தயாரிப்பாளர்தில் ராஜூ தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

முழுக்க முழுக்க குடும்ப சென்டிமென்ட் கதையாக உருவாக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. விஜய் 66' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில், வரும் ஜூன் 22-ம் தேதி நடிகர் விஜயின் பிறந்த நாளையொட்டி, அதற்கு முன்னதாக ஜூன் 21-ம் தேதி மாலை 6.01 மணிக்கு படத்தின் முதல் பார்வைபோஸ்டர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-இராமானுஜம்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

திங்கள் 20 ஜுன் 2022